புதன், 26 டிசம்பர், 2007

கண்டுகொண்டேன்

கண்டுகொண்டேன்


கண்டுகொண்டேன்
கண்ணில் தெரியாமலே
கண்ணை மறைக்கும்
களங்கமெல்லாம்
காணாமல் போகவே
காணாதவொண்ணை
காணவைத்த கண்ணதை
வேகாதவொண்ணை
வேகவைத்த வேகமதை
போகாதவொண்ணை
போகவைத்த போகமதை
கண்திறந்தே கண்ணயர்ந்தே
கண்டு கொண்டேன் - இனி
காணும் வழியறிந்தேனே
காணாமல் கலைவோருக்கும்
காட்டிக்கொடுப்பேனே


வினோத்