வியாழன், 10 டிசம்பர், 2009

தூக்கம்

தூக்கம்


இன்று
தூங்காமல் தூங்க வேண்டிய
கட்டாயத்தில் கண்மூடி நான்
அங்கங்கள் ஒவ்வொன்றாய்
உயிர் செல்ல சிலிர்த்தது ஒரு கணம்

உணர்ந்தேன்
உணர்வுக்குவியல் நெற்றியில் சஞ்சரிக்க
உடலை தூங்கவிட்டு உயி்ர் விழித்தது
உச்சிக்கும் நெற்றிக்குமான காந்த ஆட்டத்தில்
உயிருடன் கலக்க ஆரம்பித்த நிமிடங்கள்

பறந்தேன்
காற்றில் இலைச்சருகாய் - இல்லை
காற்றில் சூறாவளியாய் கிழித்தேன்
காலின் கீழெங்கும் மேகக்கூட்ட
மெத்தையில் நின்று சூரியனை உள்வாங்கி

கண்டேன்
கண்மூடி காணும் காட்சி
கண்ணாடி கண்பதின் தெளிவாய்
எண்பக்கமும் காண்கிறேன் கண்மூடி

உயிர்த்தேன்
தீயின் வெப்பமாய் நீரின் தண்மையாய்
உடலும் உணர்வும் பிரிந்தும் பிரியாமலும்
கனவும் நனவும் கலந்தும் கலக்காமலும்
தெளிவாய் ஒடிய நீரோட்டமாய்

நெளிந்தேன்
நிஜத்தில் நித்திரை கொண்டு
நிஜத்தில் ஒரு புதியமனோ உலகமதில்
உயிர் மட்டும் உலவி உலவி
உணர்வு தத்தளித்து மன உடல் அசைந்து

நினைக்கிறேன்
நான் உறங்குகிறேன் - தெரிகிறது
உடல் உணர்வு - இருக்கிறது
கண்கள் மூட இறந்து
வேற்றுலகில் முளைக்கிறேன்

இனி
எத்தனை நேரம் என்பதறியேன்
இனி தூங்கியாக வேண்டும்
யோக மனமே அமைதி அமைதி
மனம் சொன்ன வினாடியில்
தூங்கிப்போனேன் நான்.

வினோத்
http://tamilnanbargal.com/friends/vinoth