சந்திராயன்
சந்திராயன் முத்தமிட்டது சந்திரனை
சத்தமின்றி பூமி காதலன் தூதனுப்பியது
எடுத்தனுப்பிய காதலி முகம் கண்டு
கண்கொட்ட மறந்திட்டான்
பாட்டி சொன்ன நிலாநிலா ஓடிவாவும்
பாம்பு விழுங்கிய நிலாவும்
பாடிய பாட்டுகள் பேதைகளின் பித்தலாட்டமென
பரப்பித்திரியும் பகுத்தறிவு ஏளனமே
பாம்பும் சந்திரனும் உன்னுடலில் இருக்குதடா
பகுத்தறிவாதம் பேசும் பாராஅறிவுடையோனே
கற்பனைக்கும் உவமைக்கும் பொருளறியா தமிழறிஞரா
காலாகாலம் இது ஏளனமாகிடுமடா
கற்றது கைமண் அளவடா
கண்ணால் காணும் உன்னின் ஒரு
மயிரைக்கூட தடுக்க முடியாதடா உன்னால்
மௌனமாயிருந்து கற்றுக்கொள்ளடா
சத்தியத்தை சத்தியமான சகத்தினை
சகமான உன்னை உன்னுள்ளே உறைபவனை
உன்னுள்ளே உறைந்தவனை உணர்ந்திட்டால்
சத்தியமாக சொல்கிறேன் நீதான் இறைவனடா
வினோத்
சந்திராயன் முத்தமிட்டது சந்திரனை
சத்தமின்றி பூமி காதலன் தூதனுப்பியது
எடுத்தனுப்பிய காதலி முகம் கண்டு
கண்கொட்ட மறந்திட்டான்
பாட்டி சொன்ன நிலாநிலா ஓடிவாவும்
பாம்பு விழுங்கிய நிலாவும்
பாடிய பாட்டுகள் பேதைகளின் பித்தலாட்டமென
பரப்பித்திரியும் பகுத்தறிவு ஏளனமே
பாம்பும் சந்திரனும் உன்னுடலில் இருக்குதடா
பகுத்தறிவாதம் பேசும் பாராஅறிவுடையோனே
கற்பனைக்கும் உவமைக்கும் பொருளறியா தமிழறிஞரா
காலாகாலம் இது ஏளனமாகிடுமடா
கற்றது கைமண் அளவடா
கண்ணால் காணும் உன்னின் ஒரு
மயிரைக்கூட தடுக்க முடியாதடா உன்னால்
மௌனமாயிருந்து கற்றுக்கொள்ளடா
சத்தியத்தை சத்தியமான சகத்தினை
சகமான உன்னை உன்னுள்ளே உறைபவனை
உன்னுள்ளே உறைந்தவனை உணர்ந்திட்டால்
சத்தியமாக சொல்கிறேன் நீதான் இறைவனடா
வினோத்