சனி, 12 டிசம்பர், 2009

கன்னி

கன்னி



விலைமாட்டுக்கு எஜமானியப் பாக்கணுமாம்...
விருந்திற்கு வருகிறதாய் தகவல்.
வெட்கங்கொள்ள நடிக்கிறேன்.....
என்றோ தொலைந்து போனதது
வரவேயில்லை!
தங்கைக்கு பிறகு தானென்று
தன் காதல் இழந்து அண்ணா
வீட்டையிழந்தும் எனக்கான
சேமிப்பை தொடாத அப்பா
கைகாதில் ஏதுமில்லாமல்
மறைக்கப் பழகிய கைகளாய்
மறுத்த நிகழ்ச்சிகளில் அம்மா
எல்லோர் அன்புக்கும் முன்னால்
தன்வாழ்க்கை தலைபட்டு
என் வெட்கம் விட்டுப்போனது என்றோ
அடிமாட்டு பேரம் நடக்கையில்
பெண்ஜென்மம் தீயில் பிணமாய் சிதறி
அடிபணியா மாடு விலகையில்
வீடெங்கும் மாயான அமைதி
விட்டுவிடத் துணிந்தும்
மறுக்கிறது இக்கன்னி உடம்பு
-- வினோத்