சனி, 16 மே, 2009

பேதைப் பெண்ணே



பேதமையால் பிதற்றும்
பேதை பெண்ணே - உன்
மனதை திறந்துபார்.

நிலவின் குளிமை தெரியும்
அதை நோக்கி காத்திருக்கும் உன்
சொந்தங்களின் பாசம் புரியும் அதைவிடுத்து
சாக்கடை வாசம் பிடிக்க நினக்காதே.
பூவிற்கு வாசம் தருபவள் நீ. ஒரு
முள்ளை உள்ளுள் குத்திக்கொள்ளாதே.

கடவுளின் இருப்பிடத்தில்
தாயும் தகப்பனும் வைத்தாய், அதில்
ஏன் ஒரு சாத்தானை சேர்க்கிறாய்
விட்டுவிலகச்சொன்னால் போகமாட்டாய்
அது உன் வயதி்ன் கோலம்

நண்பனாக சொல்கிறேன். கேள்.
உன்னால் பிறர் நோக முடியாது.
பின்னால் என்னால் நீ நோகவும் வேண்டாம்

உன்நடபு கிடைத்திருப்பதே எனக்கு போதும்.
வேண்டாம் என்னால் துன்பம் எப்போதும்

கண்டதையெல்லாம் தொட்டுப்பார்க்கும்
வயசம்மா உனது. -நான்
கண்டுவிட்டேன் இதை எப்போதோ.

நிலவைக்கூட தொட்டுவிட
நினைக்கும் பிஞ்சு உள்ளம்,
உன்னை அறியாமலே அதை
கையோடு சேர்க்க துடிக்கிறதே.
வேண்டமடி என் செல்லமே. செல்லமே.

நான் தனியாகவே அழுது பழக்கப்பட்டவன்.
என் அழுகை உனையழுக்காக்க வேண்டாமே

அன்பினால் அழைத்தேன் செல்லம் என்று
அதையெண்ணி பூரிப்படையாதே

என்னில் கலந்துவிட்டால்
நீ அடைந்ததாத ஒன்றுமே இல்லை மாறாக
நீ இழப்பதோ ஏராளம்.

நீ புனிதவதி. அதை நல்ல
உள்ளத்திற்கு பரிசளி
அந்த நல்லவனுக்கு மதிப்பளி

உனைப்போலவே எதிர்பாத்த்து
காத்திருப்பான் ஒரு சீதையை.
அவனை ஏமாற்றாதே
உன்னை நம்பியிருக்கும் பலரையும்
அழ வைக்காதே.

உன்னை திட்டமாட்டார்கள். நல்லவர்கள்.
தன்னையே மாய்த்துக்கொள்வார்கள்.
வேண்டாமடி செல்லம்

அவர்களுக்கு ஏன் இந்த துரோகம்.
மகளின் மணவாழ்வை மனதார கண்டு
கண்ணயர காத்திருக்கும்
மனங்களை நோகடிக்காதே.

உன்னை மலராய் அர்ச்சிக்க ஒரு
கந்தர்வன் வருவான்
காத்திரு பெண்ணே அதுவரைக்கும்
காத்திரு காலம் வரும் பொறுக்திரு


--------------------
ஒரு இராட்சசிக்கு கொடுத்த அட்வைசு.
வினோத்