சனி, 8 செப்டம்பர், 2007

ஆட்டம்


ஆட்டம்





ஆடம்மா. ஆடம்மா.. ஆடாடாடம்மா..
அகத்திலோ அழுக்கில்லை
அதனால் கவலையில்லை
தேவையோ ஒன்றுமில்லை
தேடாததும் ஒன்றுமில்லை

ஆடம்மா. ஆடம்மா.. ஆடாடாடம்மா..
மடியிலும் ஒன்றுமில்லை
வழியிலும் பயமில்லை
வேஷமிது விஷயமில்லை
வேளைவந்தால் கவலையில்லை

ஆடம்மா. ஆடம்மா.. ஆடாடாடம்மா..
வாழ்க்கை வரிகளை அறிந்து கொண்டோம்
வாழ்வில் வலிகளை களைந்து விட்டோம்
பிள்ளை மனமிருக்க பொறுத்துக்கொண்டோம்
பெரியவர் உணர்விருக்க சிரித்துக்கொண்டோம்

ஆடம்மா. ஆடம்மா.. ஆடாடாடம்மா..
ஆடம்மா. ஆடம்மா.. ஆடாடாடம்மா..




0 ஞானி
வினோத் ( ஞானசூன்யம் :-) )