திங்கள், 18 மே, 2009

இனியில்லை


இனியில்லை



புத்தபூமியில் இரத்தஆறு பிணநாற்றம்
இனத்தை துடைத்துவிட்டு
அமைதியேற்றும் இறுதிக்கட்டம்
அலறும் உயிர்களை ஆர்ப்பரித்து
அழிக்கும் கடைசி யுத்தம்
இன்றே கடைசி, இனியில்லை, நிம்மதி.
புதைகுழிகளில் கண்ணீருடன்
புதிய நம்பிக்கையில் பணதில் புளரும்
சந்தர்ப்ப யோக்கியர்களை
கையெடுத்து கும்பிட்டு எதிரிகளிடமே
உதவி கேட்ட மிச்ச உயிர்களும்
இன்றுடன் அழிந்துவிடும்
இனி நிம்மதிதானே
எங்கிருந்தோ வந்து பாரதத்தில் நரங்கி
எழுதிசையும் தங்கள் கொடிகளை நாட்டி
பணத்திற்கும் மதத்திற்கும்
பெரியார் வசனம் பேசித்திரிந்து
தமிழ் கொலைகளை செவ்வனே செய்துவந்த
தமிழ் தலைக்களுக்கு வாக்களித்து
கடைசி நம்பிக்கையையும்
கெடுத்து விட்டு நிம்மதியாய்
காலத்தின் முன் மௌன சாட்சிகளாய் நாம்
எங்கே புரியப்போகிறது தமிழின் புனிதம்
எப்படி புரியும் பாரதத்தின் புண்ணியம்
விடுதலை நாளை நமக்கு பிச்சைப்போட்டதாய்
வீதியெங்கும் ஆங்கிலத்தில் பறைசாற்றி
கூட்டம் போட்டு கல்லறைமீது
இராஜ்யம் கட்டுபவர்கள் ஆயிற்றே
எப்படி புரியும் தாங்கள் குடிப்பதும்
பாரதத்தின் இரத்தம் என
இனி தமிழீழத்தில் கிடக்கும் தலையில்லா
பிண்ட கல்லறைகளில் கட்டட்டும்
புதிய இராஜ்யம், நிம்மதி தானே
போவது பெரியார் வழியாம்
கொல்வது பெரியார் கொள்கைகளை
இதுதான் நாம் கற்ற பாடம்
போதியுங்கள் இதை பிள்ளைகளுக்கும்
தந்தை நடந்து வந்த இரத்த வழிகளை
குடும்மாய் அரசியல் குளம் தோண்டி
மக்கள் நாய்களுக்கு எலும்பு பிச்சையிட்டு
சதைகளை தின்று சதைவளர்க்கும்
மாக்கள், வாழிய பல்லாண்டு
இனி உங்கள் இராச்சியம்
நடப்பதெல்லாம் நல்லதற்கு
நடந்ததும் நல்லதற்கு
உயிரும் சுதந்திரம் கேட்ட
மக்களை அழித்தாகிவிட்டது – இனி
கேட்க நாதியில்லை
குரைத்த நாயும் இப்போது சவக்குளிக்குள்
நிம்மதியாய் தூங்கலாம் :'(