புதன், 21 ஜனவரி, 2009

நா வளத்த மகராசா

நா வளத்த மகராசா

ஆடியில காத்தடிச்சா ஐப்பசில மழ வரும்
ஆடியில அடிச்சகாத்து மழைக்காக காத்திருக்கு
தெங்காத்து திரும்பிவந்து வாடக்காத்தா வீசும்
ஒங்காத்து எப்பவரும் காத்திருக்கேன் நாட்கணக்கா
கடம் வாங்கி படிக்க வைச்சேன் கம்யூட்டர் கத்துக்கிட்டான்
கடங்காறன் காத்திருக்கான் பத்திரமும் கையோட
கப்பலேறி பட்டணம்தாந் போனபுள்ள திரும்பல
கண்ணுவச்சு காத்திருக்கேன் வற்ர தடம் தெரியல
--
வெள்ளப்பய கொண்டுவந்த இங்கிலீஸு பேசிகிட்டா
மாறணச்சு நான் கொடுத்த ஏன் தமிழு மறந்துபோச்சா?
நூறு கோடி பேருக்கே இந்த மண்ணு படியளக்கும்
ஒருவா சோத்துக்கா அங்க வேல பாக்கணும்?
வளத்தேன் மகராசனா ஒனக்கென்னக் கொறயும் வச்சேன்
ஓம் மொகம் பாத்து கண்ணுறங்க கொடுத்து வைக்கலியே
--
நான் வளத்த கண்ணுகாலி எங்கூட நிக்குதப்பா
நேரம்பாத்து எழுப்பிவிட சேவலிங்கே நிக்குதப்பா
நாயா ஒளச்சொளச்சு தேய்ஞ்சுப்போச்சு ஏன்ஒடம்பு
நாளைக்கே செத்துப்புட்டா கொள்ளிவைக்க நாதியில்ல
வாய்க்கா வரப்போரம் இங்க ஜீவனும் ஏங்குதப்பா
கண்ணுல தண்ணி தீருமுன்னே வந்து சேருபுள்ள
வினோத்