செவ்வாய், 29 செப்டம்பர், 2009

உலக இதய தினத்திற்கு ஒரு கவிதை

உலக இதய தினத்திற்கு ஒரு கவிதை

என்னைக் கேட்காமலேயே
என் நண்பர்கள், அன்பர்கள்
உற்றோர்கள், உறவினர்கள்
துன்பம் கண்டு துடித்து
இன்பம் கண்டு மலர்ந்த
இதயமே!

கை கை சேர
கண் கண் பார்க்க
இதயம் இதயம் பார்த்து
நண்பர்களை அடையாளம்
காட்டினாய்!

இணைந்த இதயங்கள்
இனிதாய் இடம்பெயரச் செய்தாய்

காததிரும் சொல் கேட்டால்
கண்ணுக்கு முன் நீயழுதாய்

காணும் எல்லா இதயங்களையும்
கனிவாக கேட்டதாகச்சொல்

நீயிருக்கும் காலம் வரை
அன்புக்காகவே துடிப்பேன்
இது சத்தியம்

-- மற்றொரு இதயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக