புதன், 13 அக்டோபர், 2010

இன்று பண்டிகையாம்!

இன்று பண்டிகையாம்!

http://tamilnanbargal.com/node/28321



இன்று பண்டிகையாம்!
==================

வேலைக் களைப்பில் கலந்து போய்
தனி மின்னஞ்சல் பார்க்க
குவிந்திருந்தது வாழ்த்துகள்!
இன்று பண்டிகையாம்!

தொலைதூர அம்மாவிற்குத்
தொலைபேசி அழைத்தேன்
தொலைந்த காலங்கள்
கண்முன் ஓடியது

"சண்டை போடக்கூடாது"
ஒரே நிறத்தில் எல்லோருக்கும் சட்டை

பட்டாசு வெறுத்துப்போனது
காசை கரியாக்க விரும்பாத அப்பா

பாதியில் மின்சாரம் நின்றுபோன
தொலைக்காட்சித் திரைப்படம்

எண்ணையில் பொரியுமுன்னே
எடுத்த மாவை தின்னத் தோன்றவில்லை
"எச்சில் படுத்தாதே சாமிக்கு வைக்கணும்"

"இன்னும் இரண்டு வை அம்மா"
"இக்பால் வீட்ல நாலு பேர் அம்மா"
இரவே வீ்ட்டுக்கெல்லாம் விநியோகம்

உங்க வீட்ல என்ன வச்சாங்க?
பேசிப்பேசி பள்ளியில் பண்ட விநியோகம்

தொடர்பு கிடைத்தது.
"ஒண்ணும் வைக்கலைபா,
ஒடம்புக்கு முடியல"
அம்மாவின் தோய்ந்த குரலில்
நானும் தொலைந்து போனேன்!

"வாழ்த்துகளும், நன்றிகளும்"
எல்லோருக்கும் பதில் அனுப்பினேன்
இன்று பண்டிகையாம்!

--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக