விரும்பி நேசிக்கிறவருக்காக
விரும்பி செய்யும் செயலை
உதாசீனப்படுத்தி பேசிப் போக
இமையோரம் சிலதுளி நீர் வருமே
அது எனக்கு ரொம்ப பிடிக்கும்
இசையில் மயங்கி ஸ்வரங்களிவ் கூத்தாடி
கடல்மேல் தோணி போல் அசைந்தாடி
முடிவில் கண்ணோரம் நீர் வழிவது
ரொம்ப பிடிக்கும் எனக்கு.
நினைத்தது நடக்காமல் கோபப்பட்ட
இறைவனை இனிபார்க்கும் போது நெகிழவைக்கும்
அவன்செயலால் செயலற்று நின்றிருக்க
காண்பவற்றை மறைக்குமே
கண்ணீர்த்துளி
அது ரொம்ப பிடிக்கும் எனக்கு.
ஏனோ தெரியவில்லை,
என்னிடம் இல்லாததெல்லாம் பிடித்துப்போகிறது
எனக்கு.
வினோத்
கடைசியில் போட்டீரே ஒரு போடு!
பதிலளிநீக்குஅதுதான் விநோதனின் வெடி!
அருமையான தொகுப்பு.
ஆகிரா
மிக்க நன்றி ஐயா...
பதிலளிநீக்கு